Publish Date: Fri, 15 Feb 2019 (08:15 IST)
Updated Date: Fri, 15 Feb 2019 (08:37 IST)
பிரதமர் மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது ஒருசில வார்த்தைகள் தமிழில் பேசி திருக்குறள் ஒன்றையும் கூறினார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபோது, 'மக்களை ஏமாற்றவே மோடி தமிழில் பேசியதாக விமர்சனம் செய்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கருணாநிதி சிலை திறப்புவிழாவிற்காக சோனியா காந்தி சென்னை வந்திருந்தபோது ஒருசில வார்த்தைகள் தமிழில் பேசினார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின், சமீபத்தில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொண்டபோது ஒருசில வார்த்தைகள் பெங்காலியில் பேசினார். அரசியல் தலைவர்கள் வேறு மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்லும்போது அந்த பகுதி மக்களின் தாய்மொழியில் ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் தமிழகத்தில் பிரதமர் மோடி தமிழில் பேசியதை மு.க.,ஸ்டாலின் விமர்சனம் செய்ததாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். ஏற்கனவே இந்து மத திருமணம் குறித்து ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது மோடி தமிழில் பேசியதையும் குறை கூறியுள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்