Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் கோமாளி அண்ணாமலை: விமர்சனம் செய்த செந்தில் பாலாஜிக்கு நெட்டிசன்கள் பதிலடி

Advertiesment
annamalai senthil balaji
, செவ்வாய், 1 நவம்பர் 2022 (15:15 IST)
அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்ததற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். 
 
அரசியல் கோமாளி அண்ணாமலை குறித்த கேள்விகளை என்னிடம் தவிர்க்க வேண்டும் என்றும் உலகிலேயே ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்தசஷ்டிகவசம் படித்த யாரைவது நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்றும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்
 
நேற்று என்னுடைய செய்தியை முடிந்தால் நீங்கள் புறக்கணித்து கொள்ளுங்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதன் பின்னரும் அவருடைய கேள்விகளை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள். அவரை பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்
 
இந்தநிலையில் செந்தில்பாலாஜியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள பதிலில் அண்ணாமலை கந்த சஷ்டி கவசம் படைத்த கோட்டை ஈஸ்வரன் கோயில் என்பது அந்த கோவிலில் வடக்கு நோக்கி மயில் வாகனத்துடன் சண்முக சுப்பிரமணியர் என்ற பெயரில் முருகன் இருப்பார் என்றும், முருகனின் ஆறு முகங்களும் ஒரே திசையை நோக்கியபடி அவரே மூலவராக அருள்பாலிக்கும் அந்த இடம் அந்த கோயில் முருகன் கோயில் தான் என்றும் அண்ணாமலை விவரம் தெரியாமல் அந்த கோவிலில் கந்தசஷ்டி படிக்கவில்லை என்றும் பதிலடி தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புளூடிக் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எழுத்தாளர்: எலான் மஸ்க் அதிரடி பதில்!