Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 18 April 2025
webdunia

கோலம் போடுவதற்கு பதிலாக ஓட்டு போட்டிருக்கலாமே: திமுகவினர்களுக்கு நெட்டிசன்கள் கேள்வி!

Advertiesment
குடியுரிமை
, திங்கள், 30 டிசம்பர் 2019 (09:05 IST)
குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நேற்று கல்லூரி மாணவிகள் சிலர் கோலம் போட்டு கைதான நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பல வீடுகளின் முன்பு அந்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போடப்பட்டு உள்ளது 
 
குறிப்பாக முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியின் இல்லம், தற்போதைய திமுக தலைவர் முக ஸ்டாலின் இல்லம், திமுக எம்பி கனிமொழி இல்லம் ஆகிய வீடுகளின் முன்பு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்கள் போடப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த திமுக எம்பிக்கள், கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக அந்த சட்டத்திற்கு எதிராக தங்களது வாக்குகளை பதிவு செய்து இருக்கலாமே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
குடியுரிமை திருத்த சட்டம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது வெறும் 80 எம்பிக்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக எம்பிக்கள் வாக்களித்தார்களா? என்பது அவர்களது மனசாட்சிகளுக்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூத வழிபாட்டு தலத்தில் ஆசாமி மர்ம தாக்குதல்! – அமெரிக்காவில் பரபரப்பு!