ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த பணம் பயன்படுத்தப்பட்டதா?"

Mahendran
புதன், 21 ஆகஸ்ட் 2024 (17:08 IST)
நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ.75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நெல்சன் மனைவி மோனிஷாவின் வங்கி கணக்கில் இருந்து  ரூ.75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மொட்டை கிருஷ்ணனுடன், நெல்சனின் மனைவி மோனிஷா அடிக்கடி போனில் பேசியதும், போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மோனிஷாவிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா தொடர்பில் இருந்ததாகவும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் வெளிநாடு செல்வதற்கு முன் மோனிஷாவுடன் தொடர்ந்து பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments