Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூனையை தூக்கிலிட்டு டிக்டாக் வீடியோ: நெல்லை இளைஞர் கைது

Advertiesment
பூனையை தூக்கிலிட்டு டிக்டாக் வீடியோ: நெல்லை இளைஞர் கைது
, வெள்ளி, 22 மே 2020 (08:19 IST)
பூனையை தூக்கிலிட்டு டிக்டாக் வீடியோ
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள இளைஞர்களை ஆட்டுவித்து வரும் நிலையில் இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் டிக்டாக்கில் பூனையை தூக்கிலிடும் வீடியோ எடுத்த நபரை நெல்லை வாலிபர் ஒருவரை நெல்லை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நெல்லை மாவட்டம் பழவூர் என்ற பகுதியை சேர்ந்த தங்கதுரை என்ற இளைஞர் மாட்டுப் பண்ணை தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மாதங்களாக டிக்டாக்கிற்கு அடிமையாகி அதிக லைக்குகளுக்கு ஆசைப்பட்டு சில விபரீதமான வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது
 
இந்த நிலையில் வாலிபர் தங்கதுரை, தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை தனது வீட்டிலேயே தூக்கிலிட்டு அதனை வீடியோ எடுத்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பயங்கரமாக வைரலாகி ஒருபக்கம் லைக்ஸ்கள் குவிந்தும் இன்னொரு பக்கம் கண்டனமும் எழுந்தது
 
இந்த நிலையில் இதுகுறித்து நெல்லை மிருகவதை தடுப்புப் பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் வந்ததை அடுத்து அந்த துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கதுரையை, கைது செய்தார். இந்த சம்பவம் நெல்லை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்தியாளர்களை சந்திக்கின்றார் ரிசர்வ் வங்கி கவர்னர்: முக்கிய அறிவிப்புகள் வெளிவருமா?