மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: நெல்லை பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:58 IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லையை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை என்ற பகுதியி உள்ள ஒரு பள்ளியில் படித்துவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
 
தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயகுமார் என்பவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதவ், புஸ்ஸி ஆனந்திடம் சராமரி கேள்விகள்!.. 10 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?..

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 160 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

குமரிக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

உங்க வீட்ல எல்லாரும் சினிமா!. கேக்குறவன் கேனையனா இருந்தா!.. விஜயை தாக்கிய கருணாஸ்!...

அடுத்த கட்டுரையில்