திருநெல்வேலியில் பிரபல ரவுடியை போலீஸார் என்கவுன்ட்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அருகே களக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நீராவி முருகன். இவர் மீது கடத்தல் உள்பட 80க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் அப்பகுதியில் உள்ள நீராவி என்ற தெருவில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
நீராவி முருகனை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீஸார் முயன்றபோது போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் நீராவி முருகன் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.