எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

Mahendran
சனி, 26 ஏப்ரல் 2025 (16:03 IST)
எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் முக ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
 
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் ,
கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும்  இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது .
 
எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் முக ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.
 
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments