Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: குடும்பமே தலைமறைவு

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (21:27 IST)
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்ற புதிய புயல் கிளம்பி பெரும் பிரச்சனையாகி உள்ள நிலையில் தற்போது ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர் குடும்பமே தலைமறைவாய் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
 
தேனியில் மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவருக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவரை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர் வீட்டை சோதனையிட முயன்றனர். ஆனால் போலீசிடம் சிக்காமல் அந்த மாணவனின் குடும்பமே தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
 
அக்கம்பக்கத்தார்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த மூன்று நாட்களாகவே வீடு பூட்டி இருப்பதாக தகவல் அளித்தனர். இதையடுத்து குடும்பமே தலைமறைவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டது மேலும் அந்த மாணவன் மற்றும் மாணவரின் குடும்பத்தினர்களின் செல்போன் எண்களை கொண்டு தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் 
 
 
இந்த ஆள் மாறாட்டம் மோசடி என்பது அதிகாரிகளின் துணை இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இதில் எந்தெந்த அதிகாரிகள் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்? எத்தனை லட்சம் பணம் கைமாறியது? என்பது குறித்து விசாரணை செய்ய மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
 
 
தேனியில் மட்டுமின்றி மும்பையிலும் டெல்லியிலும் இதேபோல் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வெளிவந்துள்ள செய்திகள் நீட் தேர்வையே கேள்விக்குறியாக்கும் வகையில் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments