Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனேவில் இருந்து சென்னை வந்த 4.70 லட்சம் தடுப்பூசிகள்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (16:42 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பு தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் அனுப்பவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது
 
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட பல்வேறு தரப்பினர் மத்திய அரசை குறை கூறினர். ஊடகங்களும் தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் கடந்த சில நாட்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி தமிழகத்திற்கு வந்து உள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து அனுப்பப்பட்டது மற்றும் புனேவில் இருந்து அனுப்பப்பட்டது ஆகியவை சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் புனேவில் இருந்து சென்னைக்கு 4,70,350 கோவிஷீல்டு மற்றும் கோவாக்‌சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

போர் விமானம் தயாரிப்பவர்கள் முட்டாள்கள். எலான் மஸ்க் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments