12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: நா.த.க முன்னாள் நிர்வாகி கைது!

Siva
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (08:50 IST)
12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவி என்சிசி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் என்சிசி பயிற்சியாளர் அந்த பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

என்சிசி பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என்றும் இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நள்ளிரவில் அவரை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் ஏற்கனவே தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது என்சிசி பயிற்சியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்.. பயந்துபோய் தீக்குளித்து உயிருக்கும் போராடும் மாணவி..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: 25 பேர் பலி; நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!

என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!

அடுத்த கட்டுரையில்