தேர்தலில் வெற்றி பெற சத்ரு சம்ஹார யாகம் நடத்தினாரா பாஜக பிரபலம்?
, வியாழன், 28 மார்ச் 2024 (15:35 IST)
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற திருச்செந்தூர் முருகன் கோயிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதாக நயினார் நாகேந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த யாகம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நடந்ததாகவும் சூரசம்ஹாரம் மூர்த்தி சன்னதியில் சிறப்பு பூஜையும் நடந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த யாகம் நடத்தினால் எதிரிகள் வலுவிழந்து விடுவார்கள் என்றும் தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் உருவாகும் என்றும் ஜோதிடர் ஒருவர் கூறிய அறிவுரையின்படி இந்த யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது
ஆனால் இந்த யாகம் நடத்திய பின்னர் தான் முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் பிரச்சாரம் செய்தார் என்பதும் திமுகவினர் தற்போது வேகம் எடுத்து தேர்தல் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
களத்தில் இறங்கி வேலை பார்க்காமல் யாகம் நடத்தி எந்த பயனும் இல்லை என்று நயினார் நாகேந்திரனுக்கு நெருங்கிய தரப்பினர் அறிவுரை கூறி வருகின்றனர். இருப்பினும் யாகம் நிச்சயம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.,
அடுத்த கட்டுரையில்