தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழ்நாட்டையே இரண்டாக பிரிப்போம்: நயினார் நாகேந்திரன்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (13:21 IST)
நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா எங்களை தனித்தமிழ் கேட்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டை தனியாக கேட்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் தனித்தமிழ்நாடு கேட்கும் நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம் என்றும் கூறியுள்ளார். 
 
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே பிரித்து விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments