Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவில் நயன்தாரா: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

அதிமுகவில் நயன்தாரா: விரைவில் இணைவார் என பேச்சு?

அதிமுகவில் நயன்தாரா: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!
, புதன், 31 ஆகஸ்ட் 2016 (09:11 IST)
நடிகை நயன்தாரா அதிமுக சம்பந்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால் நயன்தாரா அதிமுகவில் சேர இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.


 
 
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால் அங்கு ரசிகர்கள் அலை மோதும். நயன்தாராவுக்கு தமிழகத்தில் இருக்கும் இந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து அரசியல் கட்சிகளே மிரண்டு போய் விட்டன.
 
இதனால் பல கட்சிகள் அவரை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி செய்தன. ஆனால் நயன்தாரா அவற்றை தவிர்த்தே வந்தார். பொதுவாக நடிகை நயன்தாரா தான் நடித்த படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கே வரமாட்டார். அப்படிப்பட்ட நயன்தாரா அம்மா சம்பந்தப்பட்ட விழாவில் பங்கேற்றதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
 
சென்னையில் அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, அம்மா அவார்ட்ஸ் என்ற விருதை முதல்வர் ஜெயலலிதா பெயரில் வழங்கியது. இந்த விழாவுக்கு வந்து வீரர்களுக்கு விருதை வழங்கியவர் நயன்தாரா.
 
வழியெங்கும் அதிமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டு, அதிமுக கொடி பறக்கும் கார்கள் புடை சூழ வந்து இறங்கிய நயன்தாரா அதிமுகவில் இணைவார் பேசிக்கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா சுவாதி கொலை வழக்கு?