Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைலாசா கரன்சிக்காக வெயிட்டிங்: நட்டி ட்விட்!!

கைலாசா கரன்சிக்காக வெயிட்டிங்: நட்டி ட்விட்!!
, வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (15:37 IST)
கைலாசா கரன்சிக்காக வெயிட்டிங் என நட்டி நட்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் நித்தியாநந்தா எப்போதும் வீடியோ வெளியிட்டு வண்டஹ் நிலையில் கொரோனா வந்ததில் இருந்து முன்பை போல வீடியோக்களை வெளியிடாமல் இருந்து வந்தார். ஆனால், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  
 
அதில், விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். கைலாசாவிற்கு நிறைய நன்கொடைகள் கிடைத்துள்ளது. நல்ல காரியங்களுக்காக இதலை செலவிட வங்கி தொடங்கியுள்ளேன்.  
 
வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது. கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டுவிட்டது. விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.  
 
உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் கைலாசாவிற்கக அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. இங்கு அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், கைலாசா நாட்டு கரன்சி பற்றி ட்வீட் செய்திருக்கும் நட்டி நட்ராஜ், “அந்த கைலாசா கரன்சி எப்படி இருக்கும்? நான் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாணமாக வீட்டுக்குள் நுழைந்த நபர்… அலறியடித்த குழந்தைகள் – போக்ஸோ சட்டத்தில் கைதான நபர்!