சட்டசபையில் நேற்று பேசிய முன்னாள் போலீஸ் அதிகாரியும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ் பிராமணர்களுக்குத் தனியாக வாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சட்டசபையில் கடந்த சில நாட்களாக காவல்துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் நேற்றுப் பேசிய முன்னாள் காவல் அதிகாரியும் தற்போதைய மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நட்ராஜ் பிராமணர்களுக்கு என தனியாக நலவாரியம் அமைக்க வேண்டுமெனக் கூறினார்.
அவர் ‘மயிலாப்பூர் தொகுதி வாழ் பிராமணர்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா அமைத்தது போல் பிராமணர்களுக்கென தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள். ஏற்கனவே அமைக்கப்பட்ட அர்ச்சகர்கள் ,கிராம பூசாரிகளுக்கு நலவாரியங்கள் சிறப்பாக செயல்படவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அரசின் கனிவான கவனத்திற்கும் பரிசீலனைக்கும் வைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.