Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய கல்வி கொள்கையை நிராகரிக்க வேண்டும் !

Advertiesment
தேசிய கல்வி கொள்கையை நிராகரிக்க வேண்டும் !
, திங்கள், 29 மார்ச் 2021 (12:03 IST)
தேசிய கல்வி கொள்கை 2020-தை நிராகரிக்க வேண்டும், மாநில கல்வி கொள்கையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று கோவையில், பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்ளை காலை சந்தித்த பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொது செயலாளர் பிரிண்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது இந்திய அரசமைப்பு சட்டம் எனவும், மாநில அரசு மக்களின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள அதிகாரம் அளித்து வருகின்றது.
 
இந்த நிலையில் கல்வி மத்திய அரசு பட்டியலில் இல்லை எனவும், பொதுப்பட்டியலில் தான் உள்ளது எனவும், பல்கலைக்கழக உருவாக்கம், நிர்வாகம் போன்றவை மாநில பட்டியல் தான் உள்ளது எனவும், மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை அப்படியே மாநில அரசு பின்பற்றவேண்டும், மாநில அரசுக்கும் மாநில சட்டப்பேரவைக்கு மாநிலத்தில் உள்ள வாய்ப்புகளை அடிப்படையில் மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்றிட கொள்கைகள் வகுக்கவும், சட்டங்கள் இயற்றவும் , உரிமை இல்லை என வாதத்தை முன் வைத்தால் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
 
தேசிய கல்விக் கொள்கையின்  ஆபத்தான கரு பொருளை உணர்ந்து, அதனை நிராகரிக்க வேண்டுமெனவும், மாநிலத்தில் வாழும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாநில கல்வி மேம்பாட்டிற்காக மாநில கல்வி கொள்கை வகுத்திட  வேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்ற தாகவும், தேசிய கல்வி கொள்கை 2020ஐ நிராகரிக்க வேண்டும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும், எனவும் நமது வாக்குரிமையை பயன்படுத்தி அதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டிய பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என  பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்ச்சியில், பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரிண்ஸ் கஜேந்திர பாபு, அதன் தலைவர் ரத்னசபாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர்  ராமகிருஷ்ணன், திராவிடர் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் வெண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் கண் கலங்கியது வேதனையா இருக்கு.. மன்னிசுடுங்க! - மன்னிப்பு கோரிய ஆ.ராசா!