Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தந்தி டிவிக்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தந்தி டிவிக்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Advertiesment
தந்தி டிவிக்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
, சனி, 21 ஜனவரி 2017 (12:15 IST)
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி சேனலான தந்தி தொலைக்காட்சிக்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து தந்தி தொலைக்காட்சியை கௌரவப்படுத்தியுள்ளது.


 
 
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர் மத்தியில் தந்தி தொலைக்காட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தந்தி தொலைக்காட்சிக்கு நேஷனல் மீடியா அவார்டு என்று அழைக்கப்படும் சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருதை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
ஜனவரி 25-ஆம் தேதி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை தந்தி தொலைக்காட்சிக்கு வழங்க உள்ளார். பல்வேறு சூழல்கலில் தந்தி தொலைக்காட்சி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டாலும் அதன் சேவையை பாராட்டி இந்திய தேர்தல் ஆணையமே சிறந்த தொலைக்காட்சிக்கான விருதை அளித்திருப்பது பாராட்டுக்குறியது.
 
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் சமூக வலைதளங்களில் அதிகமாக மீம்ஸ் போட்டு கலாய்க்கப்படுவதும் தந்தி டிவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்தியாளர்களை தாக்கிய கும்பல் - எம்.எல்.ஏ. கணவனின் அராஜகம்