உடைகிறது ஓபிஎஸ் அணி: வெளியேறுகிறார் நத்தம் விஸ்வநாதன்?
உடைகிறது ஓபிஎஸ் அணி: வெளியேறுகிறார் நத்தம் விஸ்வநாதன்?
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியேற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவை எதிர்த்து தனியாக வந்த ஓபிஎஸ் அணி தற்போது உடையும் நிலமையில் உள்ளதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் ஓபிஎஸ் அணிக்கு 12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் அப்படியே நின்றுவிட்டது. இதனால் ஓபிஎஸ் அணியின் ஆதரவும் அப்படியே நின்றுவிட்டது.
இந்நிலையில் அந்த அணியில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. குறிப்பாக ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட ஆரம்பித்த தொடக்கத்திலேயே அவருடன் இணைந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவை பெற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் சமீபத்தில் தனது அணியின் முக்கிய சில தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். இதுபோன்ற விஷயங்கள் குறித்து ஓபிஎஸ் தன்னுடன் விவாதிப்பது இல்லை எனவும் சொல்வது இல்லை எனவும் நத்தம் விஸ்வநாதன் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளார்.
பல்வேறு முடிவுகளை எடுக்கும் முன்னர் ஓபிஎஸ் நத்தம் விஸ்வநாதனுடன் விவாதிப்பதில்லையாம். இந்த நிலமை பல நாட்களாக நீடிப்பதால் நத்தம் விஸ்வநாதன் நீண்ட நாட்களாக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் மனநிலையில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அப்படி விலகும் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்வார் அல்லது அரசியலில் இருந்தே ஒதுங்குவார் என கூறப்படுகிறது.