என்னை முதல்வராக்கு- சசிகலாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நடராஜன்

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (12:34 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக வட்டாரத்தில் சில குழப்பங்கள் மட்டும் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படாலும் அது அனைவராலும் விரும்பட்ட நிகழ்வாக அமையவில்லை என்பதே உண்மை. காரணம் சசிகலா தலைமையை ஏற்காமல் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு பகிரங்கமாகவே ஆதரவு கொடுத்து வருகின்றனர்.இதனால் அவருக்கு நாளுக்கு  நாள் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.


 

இந்நிலையில் பொங்கலுக்கு முன்பே சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிலும் அவருக்கு தடங்களே ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. இனியும் தாமத்தித்தால் தனது முதல்வர் கனவு அவ்வளவுதான் என்று எண்ணிய சசிகலா தற்போது அதற்கான வேலைகளை விரைவாக துவங்கியுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனிடையே சசிகலா கணவர் நடராஜனும் முதல்வர் கனவில் மும்முரமாக உள்ளாராம். தன்னை முதல்வராக்கு; அனைத்தை பிரச்ச்சனைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன் நீ முதல்வரானால் அது நல்லதல்ல என்று சசிகலாவிடம் கூறினாராம். இதனால் கடும் மன உளச்சலில் சிக்கி தவிக்கிறாராம் சசிகலா.  நடராஜனை முதல்வராக தேர்வு செய்வது குறித்து பேசினால் அதிமுகவில் ஏற்படும் பிர்சனைகளையும்  நன்றாக அறிந்துள்ளார் சசிகலா. அதனால் நடராஜன் கனவை ஒருபோதும் சசிகலா ஏற்கமாட்டார் என்றே கட்சி வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments