ஆதார் அட்டை மூலம் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகம்

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (12:04 IST)
ஆதார் அட்டை மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


 

 
மத்திய அரசு பொதுமக்களிடம் ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை செய்ய ஊக்குவித்து வருகிறது. அதன்படி பரிவர்த்தனையை எளிதாக்க ஆதார் அட்டை பயன்படுத்தும் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
 
இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்க தற்போது 14 வங்கிகள் முன்வந்துள்ளன. விரைவில் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஆனால் சில பகுதிகளில் ஆதார் எண்களை பயன்படுத்தி பணம் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.
 
ஆதார் எண்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கு, வாடிக்கையாளர்களின் ஆதார் எண்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை 49 கோடி வாடிக்கையாளர்கள் மட்டும்தான் அவர்களது ஆதார் எண்களை வங்கி கணக்குடன் இணைத்துள்ளனர். 
 
எல்லோருடன் தங்களது ஆதார் எண்களை வங்கி கணக்குடன் இணைத்த பிறகு இந்த திட்டம் அமல்படுத்தப்படும். பின்னர் ஸ்மார்ட்போன் மற்றும் கார்டுகள் இல்லாமல் எளிதாக பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியர்களுக்கான விசாவை நிறுத்திய வங்கதேசம்.. இரு நாட்டின் இடையே பரபரப்பு..!

இன்று முதல் ரூபாய் 3000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு.. முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..

வெனிசுலா இனி அமெரிக்க தயாரிப்புகளை மட்டுமே வாங்கும்.. ட்ரம்ப் அதிரடி தகவல்..!

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments