Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்குநேரி தொகுதி : ’கவர்னர் தமிழிசையின் ’அப்பா விருப்பமனு !!

நாங்குநேரி தொகுதி : ’கவர்னர் தமிழிசையின் ’அப்பா  விருப்பமனு !!
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (13:35 IST)
நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். மனு மீதான பரிசீலனைகள் அக்டோபர் 1 ம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் திமுக தலைவர்கள், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தொகுதிகள் குறித்து பேசினர். இதில் திமுக - விக்கிரவாண்டி மற்றும் புதுவையிலுள்ள காமராஜ் நகர் தொகுதியிலும், காங்கிரஸ் - நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக திமுக. தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
 
அக்டோபர் 21ல் நடக்கும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் அக்டோபர் 24ல் நடைபெறும் என தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக உள்ளனர்.
 
எனவே, நாங்குநேரி தொகுதியில் ஏற்கனவே பலமுறை காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றிருப்பதால் இம்முறையும் காங்கிரஸ் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அதனால் அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல்,  வரும் இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் ஜெயித்துவிடுமென்ற நம்பிக்கை உள்ளதால் , அடுத்து விக்கிரவாண்டி மற்றும் காமராஜ் நகர் ஆகிய தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் திமுக ஜெயிக்க சேப்டியாக அரசியல் பிளேன் போட்டுள்ளார் முக ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
 
இந்த நிலையில், இன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும்  தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுடைய தந்தை குமரி ஆனந்தன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இவர் பிரபல இலக்கியவாதி, தமிழிறிஞர் சொற்பொழிவாளர் மற்றும் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வழியுறுத்தி தொடந்து போராடி வருபவர் ஆவார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”சுபஸ்ரீ இறக்கவேண்டும் என்பது விதி”.. அதிமுகவுக்கு முட்டு கொடுக்கும் பிரேமலதா