Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வந்ததால் மட்டும்தான் அ.தி.மு.கவை காப்பாற்றமுடியும்: நாஞ்சில் சம்பத்

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (18:36 IST)
சசிகலா அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.  
 
அதிமுகவின் அப்பாவி தொண்டர்கள் சசிகலாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் என்றும் சசிகலா வந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தொண்டர்கள் நெஞ்சில் காலூன்றி விட்டது என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தொண்டர்கள் மட்டுமல்ல அதிமுக நிர்வாகிகளும் தற்போது சசிகலா தலைமை ஏற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று கூறி வருகிறார்கள் என்று தெரிவித்தார் 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் சசிகலா அதிமுகவை வழிநடத்துவார் என்றும் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments