டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருந்தேன் - நாஞ்சில் சம்பத்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (10:57 IST)
டிடிவி தினகரன் பழி வாங்கப்பட்ட பொழுது அவருக்கு பக்கபலமாக இருந்தேன் என நாஞ்சில் சம்பத் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
டிடிவி தினகரன் கடந்த வாரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கியதால்  அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், நேற்று முந்தினம்  அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை. அமமுக என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை. டிடிவி தினகரனின் அநிநாயத்தை என்னால் தாங்க முடியாது. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்து என்னால் பேச முடியாது. அரசியலில் இருந்தும் நான் விலகுகிறேன். எந்த கட்சியிலும் நான் இல்லை என்று கூறியிருந்தார்.
 
இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் பேசியபோது, அண்ணாவையும், திராவிடத்தையும் அவமதிக்கவில்லை, நாஞ்சில் சம்பத் அமைப்பிலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது என்று பேசினார்.
 
இந்நிலையில், நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில், 
 
“இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.
 
அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை, அதனால் தான் கவலையோடு வெளியேறினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments