முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை: நமீதாவின் நம்பிக்கை கருத்து!
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை: நமீதாவின் நம்பிக்கை கருத்து!
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வார காலமாக மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் உள்ளார் முதல்வர்.
அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து செல்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஜெயலலிதாவுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா முதல்வரின் உடல்நலம் குறித்து நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை நமீதா. ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக திருப்பதி சென்று சிறப்பு பிராத்தனை செய்தார் அவர்.
இந்நிலையில் தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி நடிகை நமீதாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், மாண்புமிகு அம்மா அவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்திருக்கிறார். அம்மாவுக்கு கடவுளின் ஆசி எப்போதுமே உண்டு. இத்தனை கோடி மக்கள் அம்மாவுக்காக பிராத்திக்கிறோம். அவர்கள் மீண்டு வருவார்கள் என உறுதியாக கூறினார்.