Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னால் பாஜகவை சக்திமிக்க கட்சியாக மாற்ற முடியும்: நமீதா

Advertiesment
என்னால் பாஜகவை சக்திமிக்க கட்சியாக மாற்ற முடியும்: நமீதா
, ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (09:22 IST)
நேற்று பாஜகவின் செயல் தலைவர் ஜேபி நட்டா அவர்கள் தமிழகம் வந்திருந்தபோது அவரது முன்னிலையில் நடிகை நமிதா பாஜக கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 
 
இந்த நிலையில் பாஜகவில் இணைந்தவுடன் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய நமீதா, ‘தமிழகத்தில் சக்தி மிக்க கட்சியாக பாஜகவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் மூலமாக அந்த நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
 
தமிழக கலாசாரம் மிகவும் தொன்மையானது, அது இல்லாமல் இந்திய கலாச்சாரம் தமிழக கலாச்சாரம் இல்லாமல் முழுமை பெறாது. தமிழக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த ஆசையை பாஜகவில் இணைந்து செயல்படுத்த விரும்புகிறேன்’ என்று நமீதா தெரிவித்தார்.
 
நமீதாவை அடுத்து நடிகர் ராதாரவியும் நேற்று ஜேபி நட்டா முன் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன் 400 வருடங்கள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக வளராது என்று பேசிய ராதாரவி தற்போது அக்கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலன் முன் பள்ளி மாணவி 6 பேரால் பலாத்காரம்: அதிர்ச்சி சம்பவம்