Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி ஆசை; ஸ்டாலின் சூட்சமம் என்ன? விளாசிய நமது அம்மா!

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (09:38 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் பாஜக ஆட்சியின் அங்கம் வகிப்பதை குறித்து அளித்த பதிலை நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது. 
 
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்குமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என பதில் அளித்தார். 
 
ஸ்டாலினின் இந்த பதில் காங்கிரச் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது விவாத பொருளாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் திமுக பேசி வருகிறது என தமிழிசை கூறிய குற்றச்சாட்டை இந்த பதில் நிரூபிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கட்டுரை கூறப்பட்டிருப்பதாவது, மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் மட்டுமே அங்கம் வகிப்போம் என்று ஸ்டாலின் பதில் அளித்திருத்த வேண்டும். 
 
ஆனால், அவரோ 23 ஆம் தேதிக்கு பிறகு பதில் அளிக்கிறேன் என கூறியிருக்கிறார். அப்படியென்றால் இதன் சூட்சமம் என்ன? மத்தியில் பதவி பிடிப்பதிலேயே ஸ்டாலின் குறியாக இருக்கிறாரே தவிர கொள்கை கோட்பாடுகளை அவர் கைப்பிடிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என நமது அம்மா விமர்சித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments