Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வக்பு மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காத தமிழக எம்பி.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சா?

Advertiesment
நாமக்கல்

Mahendran

, வியாழன், 10 ஏப்ரல் 2025 (15:08 IST)
வக்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாமக்கல் எம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்த விசாரணை செய்தபோது, குளிர்சாதனக் கருவி பழுதால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில், மர்ம நபர்கள் யாரேனும் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பில், நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்கவில்லை என்றும், அதனால் அவருக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவர் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்காததால்தான் அவரது வீட்டிற்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பின்போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் தான் தன்னால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் மாதேஸ்வரன் எம்பி விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்