Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோல் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதிய நளினி!

Webdunia
புதன், 26 மே 2021 (17:14 IST)
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி பரோல் கேட்டு முதல்வர் மற்றும் உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒருவரான பேரறிவாளனுக்கு நேற்று 30 நாட்கள் மருத்துவ விடுமுறை கிடைத்தது. அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் 30 நாட்கள் விடுமுறை கேட்டதாகவும் ஆனால் அந்த விடுமுறை கோரிக்கையை சிறை அதிகாரியை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து இப்போது நளினி தனக்கும் தன் கணவருக்கும் பரோல் கேட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘கணவரின் தந்தை இறந்து ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில் அவருக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் எனவும், தனது தாயார் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments