Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளித்த மாவு விவகாரம்: ஜாமீனில் வெளிவந்த கடைக்காரர்!

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (09:18 IST)
புளித்த மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கூறப்பட்ட கடைக்காரர் செல்வத்திற்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது
 
எழுத்தாளர் ஜெயமோகன் கடந்த வாரம் ஒரு கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். அந்த மாவு புளித்து போனதாக மீண்டும் கடைக்காரரிடம் கொடுக்க சென்ற ஜெயமோகன், கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து கடைக்காரர் செல்வம் தாக்கியதாக ஜெயமோகனும், ஜெயமோகன் தாக்கியதாக கடைக்காரர் செல்வமும் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் ஜெயமோகனின் புகாரின்மீது மட்டும் நடவடிக்கை எடுத்த போலீசார் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்
 
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து செல்வம் தாக்கல் செய்த மனு நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கடைக்காரர் செல்வம் இன்று விடுதலையாவார் என தெரிகிறது
 
இந்த நிலையில் ஜெயமோகன் தாக்கியதாக தான் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று செல்வம் நீதிமன்றம் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஒரு திமுக பிரமுகர் என்பதாலும், திமுகவினர்களும், வணிகர் சங்கங்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்க திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments