Publish Date: Sat, 12 Feb 2022 (07:43 IST)
Updated Date: Sat, 12 Feb 2022 (07:46 IST)
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியது என்பதும் பல இடங்களில் மழைநீர் தேங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.