நாகை - இலங்கை பயணிகள் கப்பல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.. என்ன காரணம்?

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (12:16 IST)
நாகை - இலங்கை இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயணிகள் கப்பல் தொடங்கப்பட்ட நிலையில் இந்த கப்பல் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நாகை -  இலங்கை பயணிகள் கப்பலை சமீபத்தில் பிரதமர் மோடி  துவக்கி வைத்த நிலையில் இந்தக் கப்பலில் முதல் நாள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால்  இரண்டாவது நாளே பயணிகள் கூட்டம் இல்லை என்பதால் ரத்து செய்யப்பட்டது.
 
இதனை அடுத்து வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இந்த கப்பல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது  நாகை இலங்கை இடையே கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கை சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சொந்த ஊர் திரும்ப காங்கேசம் துறைமுகத்திற்கு வருகை தந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments