இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸி அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 36 ஆவது ஓவரில் இலக்கை எட்டி இந்த உலகக் கோப்பையின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் எல் பி டபுள் யூ முறையில் அவுட் ஆனார். இதற்கு அவர் டி ஆர் எஸ் கேட்க பந்து ஸ்டம்ப்பின் ஓரத்தில் பட்டு செல்வது போல காட்டியது. இதனால் மூன்றாம் நடுவர் கள நடுவரின் முடிவையே அறிவிப்பதாக அறிவித்தார். இதனால் கோபமான வார்னர் தன்னுடைய பேட்டைத் தரையில் தட்டி கள நடுவரையும் ஆவேசமாக திட்டிக்கொண்டே சென்றார்.