Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை இந்திய அளவில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
புதன், 30 மே 2018 (18:34 IST)
இன்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறுதல் கூற சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தூத்துகுடி மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். இதனால் அரசியல் கட்சி தலைவர்களின் மனதில் கிலி எழுந்துள்ள நிலையில் தூத்துகுடியில் வாலிபர் ரஜினியை நோக்கி 'யார் நீங்க' என்று கேட்ட கேள்வி அவர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் என்ற வாலிபர் ரஜினியை பார்த்து 'யார் நீங்க' நூறு நாள் போராட்டத்தின் போது எங்க இருந்தீங்க' என்ற கேட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது
 
இந்த நிலையில் 'டுவிட்டர் பயனாளிகள் இதனை வைத்து #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். தமிழ் மொழி தெரியாதவர்கள் இந்த ஹேஷ்டேக்கிற்கு என்ன அர்த்தம் என்று ஆங்கிலத்தில் கேட்டு வருகின்றனர். ஒருபக்கம் தூத்துகுடி மக்களின் அமோக வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த் ஒரே ஒரு வாலிபர் கேட்ட ஒரே ஒரு கேள்வி இந்திய அளவில் டிரெண்டாகியதை எண்ணி நிச்சயம் அதிருப்தி அடைந்திருப்பார் என்றே கூறப்படுகிறதுல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி.டி.வி.தினகரனுடன் பேசினேன்; அவர் மறுபரிசீலனை செய்வார்.. அண்ணாமலை நம்பிக்கை..!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாவுக்கு தடை! அண்டை நாடு எடுத்த அதிரடி முடிவு..!

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அடுத்த கட்டுரையில்
Show comments