Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

Prasanth K
வெள்ளி, 6 ஜூன் 2025 (09:23 IST)

தமிழக சட்டமன்ற தேர்தலை டார்கெட் செய்து வேகமாக தவெக இயங்கி வரும் நிலையில் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகிறார் விஜய்.

 

தமிழக வெற்றிக் கழகம் ஒரு பெரும் மாநில கட்சியாக பரிணமிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. பூத் கமிட்டி லெவல் வரை கட்சியை வலுப்படுத்த பூத் கமிட்டி ஏஜெண்ட் மாநாட்டை 5 முக்கிய நகரங்களில் நடத்த தவெக திட்டமிட்டது. அதன்படி கோவையில் வெற்றிகரமாக பூத் கமிட்டி மாநாடு நடந்து முடிந்த நிலையில் திருச்சி, மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் விரைவில் மாநாடு நடத்தப்பட உள்ளது.

 

தற்போது ஜனநாயகன் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் தனது அரசியல் சுற்றுப்பயணம் குறித்து கவனம் செலுத்தி வருகிறாராம் விஜய். அரசியல் சுற்றுப்பயணத்திற்கு பிறகே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை ஜூலை மாதம் நடுவே விஜய் தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகிறது. 42 நாட்கள் தொடர் சுற்றுப்பயணத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

 

அதற்கான பணிகளை தொடங்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிர்வாகிகளுக்கு பெர்சனலாக அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள தலைவர் விஜய், கட்சி குறித்து வரும் விமர்சனங்களுக்காக வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், 2026 தேர்தலை குறிவைத்து முழுவதும் அதை நோக்கி இயங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments