Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி கைது

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (11:38 IST)
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100வது நாள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனால் கலவரம் செய்தவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த கலவரத்தின்போது ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் போலீசார், தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தீ வைத்த  வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வினயரசு என்பவரை கைது செய்துள்ளனர்
 
ஸ்டெர்லைட், போராட்டத்தின் போது, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டதாகவும், அவரை கைது செய்த சிப்காட் போலீஸார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சே விட முடியல.. டெல்லியை சூழ்ந்த காற்றுமாசு! செயற்கை மழைதான் ஒரே வழி? - டெல்லி அரசு கோரிக்கை!

இன்று ஒரே நாளில் 20 விமானங்கள் ரத்து.. சென்னை விமான பயணிகள் கடும் அதிருப்தி..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகள்: இலங்கை அரசு புதிய முடிவு..!

கலைஞர் சிலை மேல் கை வைத்தால்.. பதம் பார்ப்போம்! - சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments