இதுவரை யாரும் பார்க்காத சோழனின் ஓவியம்! – ட்விட்டரில் வெளியிட்ட சீமான்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (17:20 IST)
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராஜராஜ சோழனின் அரிதான ஓவியத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

சோழ பேரரசர்களில் சிறந்தவராகவும், தஞ்சை பெரிய கோவிலை கட்டியவராகவும் அறியப்படும் ராஜராஜசோழன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மனுக்கு 1035வது சதயவிழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசன் அருண்மொழிவர்மனின் காணக்கிடைக்காத அரிய ஓவியத்தை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீமான் “பேரரசன் அருண்மொழிவர்மன் அவர்களது 1074வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சாந்தாராம் அறையில் முழு வண்ண ஓவியமாக உள்ள பேரரசரின் ஓவியத்தை நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி பெருமிதத்துடன் வெளியிடுகின்றது.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

ஏற்கனவே 3 குழந்தைகள்.. இன்று ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மொத்தம் 7 குழந்தைகள்..!

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றமா? என்ன காரணம்?

பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! மேடையில் அறிவுறுத்திய உதயநிதி ஸ்டாலின்!?

சிவாஜிநகர் மெட்ரோ நிலையத்திற்கு புனித மேரி என பெயர் மாற்றமா? அமைச்சர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments