Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (12:36 IST)
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 50% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது போலவே இந்த நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதியில் பெண் வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் நான்கு வேட்பாளர்கள் குறித்த விபரம் பின்வருமாறு:
 
திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி
 
ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா 
 
சூலூர் - வெ.விஜயராகவன் 
 
அரவக்குறிச்சி - பா.க.செல்வம்
 
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மேலே உள்ள நால்வரும் இன்று அல்லது நாளை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments