திமுகவில் சேர்ந்தது ஏன்? ராஜீவ் காந்தி விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து விலகினார் என்பதும் கட்சியிலிருந்து விலகிய பின்னர் அவர் நாம் தமிழர் கட்சியையும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று திடீரென அவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதனை அடுத்து திமுகவில் இணைந்தது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்
தமிழ் தேசிய கொள்கை என்பது திராவிடத்தின் விதையாக தான் நான் பார்க்கிறேன் என்றும் திராவிட இயக்கம் இந்தி மொழியை ஆதரிக்கவில்லை என்றும் அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய கொள்கையை தழைத்தோங்க காரணமாக இருக்கும் பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதிதான் காரணம் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்
திராவிட இயக்கங்களும் தமிழ் தேசிய இயக்கங்களும் ஒத்த கருத்துடைய நிலையில் செயல்பட்டு வருவதால் திமுகவில் இணைய காரணம் என்றும் திராவிடம் சார்ந்த கொள்கைகள் இணைந்து பயணிப்பது தனக்கு மகிழ்ச்சி என்றும், சுயமரியாதைக்கு உட்பட்டு நான் இந்த இயக்கத்தில் இணைந்து உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்