Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைவி3 ஆட்ஸ் மோசடி- 5000 பேரை திரட்டியது எப்படி?

my way 3 ads

Sinoj

, திங்கள், 29 ஜனவரி 2024 (20:13 IST)
கோவையில் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என்ற நூதன எம்.எல்.எம். மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்த நிலையில்,  இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தனர். 
 
ஆனால் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வந்த போது மக்கள் கோவை எல்என்டி பைபாஸில் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
பல ஆயிரம்பேர் பல நூறு கோடி ரூபாயை அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சில ஆயிரங்களில் முதலீடு செய்தால் ரூ.200 முதல் வங்கிக்கணக்கிற்கு பணம் வரும் எனச் சொல்லி மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில், மைவி3 ஆட்ஸ் மோசடி-5 ஆயிரம் பேரை திரட்டியது எப்படி? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
அதில், மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் உறுப்பினர்களை வாட்ஸப் செயலி மூலம் வலிக்கட்டாயமாக  ஒன்று சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும், யூடியூபில் விளம்பரம் பார்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும், நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி, மோசடி செய்ததாகக கடந்த 19 ஆம் தேதி இந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தது.
 
இந்த நிலையில், கோயம்புத்தூர், நீலாம்பூர் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம்பேரை வலுக்கட்டாயமாக வாட்ஸ் ஆப் மூலம் திரட்டிய நிலையில், இன்று இந்தக் கூட்டம் கூடியதாக கூறப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தல்..! மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் மனு..!!