Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாராபுரத்தில் மர்ம வெடிச்சத்தம்.. 70 கி.மீ தொலைவிற்கு கேட்டதால் மக்கள் அதிர்ச்சி!

Tarapuram
, புதன், 29 நவம்பர் 2023 (10:01 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீரென மதியம் 2:35 மணிக்கு ஊரையே குலுக்கும்  அதி பயங்கர வெடி சத்தம் வந்தது இந்த சத்தமானது சுமார் 70கிலோமீட்டர் தொலைவிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வெடி சத்தத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தனர்.


 
கடந்த 2022 ஆம் ஆண்டு இரண்டு முறையும் தற்போது 2023 ஆம் ஆண்டில் இரண்டு முறையும் எனத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாத இடைவெளி விட்டு நான்கு முறை மர்மமான முறையில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது சத்தம் குறித்து அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை  இதனால் பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர்.

மர்ம முறையில் வெடிச் சத்தம் கேட்டதால்  வீடுகளில் இருந்த கண்ணாடி சாமான்கள் பீரோ வீட்டின் முன் கூரைகள் கதவுகள் ஆகியவை அதிர்வு ஏற்பட்டது.

இதை அடுத்து பொதுமக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது ஜெட் விமானம் ஒன்று அதிக புகைகளை வெளியிட்டவாறு வானில் வட்டமிட்டதாக  கூறப்படுகிறது. இந்த சூப்பர் சோனிக் ஜெட் விமானத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டதா என பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர்.

மேலும் வானில் விண்கற்கள் ஒன்றை ஒன்றுடன் மோதி கொண்டதால் ஏற்பட்ட சத்தமா அல்லது தாராபுரம் அருகே புகலூர் என்ற இடத்தில் உள்ள Power Grid நிறுவனத்தில் உள்ள அதிக சக்தி கொண்ட மின் டிரான்ஸ்பார்மர்கள் மின் அழுத்தத்தால் ஏற்பட்ட சத்தமாக இருக்குமா? எனவும் அல்லது நில அதிர்வு காரணமா? என ஒருவருக்கு ஒருவர் செல்போன் மூலம்  விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சத்தம் குறித்த பதிவுகள் வைரலாக பரவி வருகின்றது. இதுகுறித்து தாராபுரம் காவல் துறையும் வருவாய்த் துறையும் இதுவரை முறையான விளக்கம் அளிக்கவில்லை.

தாராபுரம்  பழைய அக்ரகாரம் பீமராயர் மெயின் வீதியில் குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் வீட்டை விட்டு அலறி அடித்தபடி வெளியே அதிர்ச்சியுடன் வானத்தையே பார்த்தனர் இதனால் தாராபுரம் மூலனூர் குண்டடம் இதனைச் சுற்றியுள்ள  100,க்கு மேற்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மர்ம வெடிச்சத்தம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்:-

தாராபுரம் நகர் பகுதியில் வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயங்கரமான வெடிசத்தம்  கேட்டது இதுகுறித்து வெளியில் வந்து அக்கம் பக்கத்தில் எல்லாம் விசாரித்த போது அவர்களும் வெடிச்சத்தம் கேட்டது என தெரிவித்தனர்.

அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது அவர்களுக்கு எதனால் வெடிச்சத்தம் ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

இதனால் பொதுமக்கள் மீண்டும் வெடிச்சத்தம் கேட்குமா இதனால் இதய நோயாளிகள் பலவீனமானவர்கள் முதியவர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த வெடிச்சத்தம் பாதிப்பை ஏற்படுத்துமா? என பீதி அடைந்து உள்ளனர்.  இரவில்  நிலநடுக்கம் அல்லது கல் குவாரிகளில் ஆழ்துளை இட்டு வெடி வைக்கிறார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா என அதிகாரிகள் விசாரித்து பொதுமக்களின் பதட்டத்தை போக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஞ்சா போதையில் சிறுவன் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு! – மதுரையில் அதிர்ச்சி!