Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவரின் உடல் மூடிய கிணற்றில்.. திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (10:01 IST)
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி படித்துவந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்தில் உள்ள மூடிய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள கோத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி விடுதியில், 9-ஆம் வகுப்பு முதல் படித்து வந்த முகிலன் என்ற மாணவர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது, முகிலன் வீட்டிற்கும் வரவில்லை என்பது தெரியவந்தது.
 
மாணவரின் தந்தை சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவரைத் தேடி வந்தனர்.காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள, இரும்பு கிரில் மூலம் மூடப்பட்டிருந்த ஒரு கிணற்றில் மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
 
சடலம் மீட்கப்பட்டபோது, கிணற்றின் மூடி மூடப்பட்டிருந்ததால், அதில் சந்தேகமிருப்பதாக மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments