Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவிற்கு எதிர்ப்பு - எம்.எல்.ஏ. பதவியை உதறி தள்ளும் நடராஜ்?

சசிகலாவிற்கு எதிர்ப்பு - எம்.எல்.ஏ. பதவியை உதறி தள்ளும் நடராஜ்?
, வியாழன், 5 ஜனவரி 2017 (15:47 IST)
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வாக உள்ள நடராஜ் விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவருக்கு நெருக்கமானவர்கள், அவருக்காகவே கட்சியில் இருந்தவர்கள், அவரால் வளர்ந்தவர்கள் ஏராளமானோர் ஒவ்வொருவராக  கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அவர்களுக்கு சசிகலாவின் தலைமை பிடிக்காததே காரணம் எனத் தெரிகிறது.
 
முதலில் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர் ஆனந்தராஜ் விலகினார். அதன்பின் நாஞ்சில் சம்பத். அவரைத் தொடர்ந்து அதிமுக முன்னணி பேச்சாளர் சிதம்பரம் ஜெயவேல் அதிமுகவிலிருந்து விலகினார்.  இன்னும் பல நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் கட்சியிலிருந்து விலகுவார்கள் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், போலீஸ் முன்னாள் டிஜிபியாக இருந்தவர் நட்ராஜ். அதன்பின் அவருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர்( டிஎன்பிஎஸ்சி)பதவி வழங்கப்பட்டது. அதன்பின் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆனார்.
 
தற்போது அதிமுக சசிகலா குடும்பத்தினர் கையில் செல்வதை பிடிக்காத அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அவர் இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்? நீதிபதி கேள்வி