சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொன்ற கொலையாளி ராம்குமார் நெல்லை மருத்துவமனையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் நெல்லை மருத்துவமனையில் இருந்த போது அவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தில் சுவாதியை வாயில் வெட்டுவதே எனது இலக்கு. அதற்காக சொந்த ஊருக்கு வந்து வாழைத்தார் வெட்டும் அரிவாளை எடுத்துவந்ததாக கூறப்பட்டுள்ளது.
சுவாதியிடம் நான் பலமுறை எனது காதலை வெளிப்படுத்தினேன். ஆனல் அவர் அதனை நிராகரித்துவிட்டார். எனது நடை, உடை, பொருளாதாரம் போன்றவற்றை குறிப்பிட்டு என்னை மிகவும் இழிவுபடுத்தி பேசினார் சுவாதி.
இதனால் ஆத்திரமடைந்த நான் என்னை இழிவுபடுத்தி பேசிய சுவாதியின் வாயை வெட்ட வேண்டும் என முடிவெடுத்து திட்டமிட்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று சுவாதியின் பின்புறமாக நின்று அவரது வாயை வெட்ட அரிவாளை வீசினேன் அது தவறி அவரது கழுத்தில் பட்டது.
நான் சுவாதியை வெட்டியதும் அங்கிருந்த ரயில் பயணிகள் அலறினர். நான் அரிவாளுடன் இருந்ததால் யாரும் என் அருகில் வரவில்லை. இதனை பயன்படுத்தி சுவாதியை சரமாரியக வெட்டி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.