Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அந்த தாய்க்கு என் வணக்கம்’ - நடிகர் விவேக் உருக்கம் !

’அந்த தாய்க்கு என் வணக்கம்’ - நடிகர் விவேக் உருக்கம் !
, திங்கள், 30 செப்டம்பர் 2019 (17:15 IST)
மறைந்த இயக்குநர் பாலசந்தர் அவர்களால் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விவேக். சினிமாவில் நுழைந்த பிறகு தனது அரசுப் பணியை துறந்துவிட்டார். 500க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களிலும்,  சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் நடிகர் விவேக்.
நடிப்பைத் தாண்டி, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களுடன் இணைந்து மரம் நடுவதிலும், இயற்கை வெளிகளைப் பாதுக்காப்பதிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும் ,  சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர்கள் மக்களிடம் இயற்கை சூழல்கள் குறித்து ஏற்படுத்திய தாக்கம் மக்களிடம் வெகுவாகப் பரவியது. 
 
இந்நிலையில், இன்று விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
,
அதில், அந்த தாய்க்கு என் வணக்கம். இயற்கைக்கு யாரெல்லாம் அன்பு செய்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர், விசிக நண்பர்கள் பல இடங்களில் பனை விதை நடுகிறார்கள்.மண் பொன்னாகும். அவர்களுக்கு என் பாராட்டுக்கள் ... என தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த பதிவில், நடிகர் விவேக், பி.டி. மதி என்பவரின் போஸ்ட் செய்துள்ள ஒரு போட்டோவை இணைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு பைசா இல்ல.. தேர்தல் செலவுக்கு என்ன செய்வது ? காங்கிரஸ் தலைவர் புலம்பல்