Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''என் நண்பர்கள் பணம், என் விளம்பரம், பாவ யாத்ரா'' - அண்ணாமலை பாத யாத்திரையை விமர்சித்த பிரபல நடிகை

Advertiesment
My friends money
, சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:59 IST)
''எண் மண் என் மக்கள்'' என்ற பாத யாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஒரு பெண் மனு கொடுத்ததாகவும் அது சாலையில் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், இதுபற்றி நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை சமீபத்த நடந்து வருகிறது. இந்த  நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண் அண்ணாமலையை சந்தித்து ஒரு மனு அளித்திருந்தார்.

அந்த மனு சிறிது நேரத்தில் சாலையில் கிடந்ததைப் பார்த்து அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த மனுவில், தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய  நடவடிக்கை வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதுபற்றி பிரபல நடிகையும், பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகியவருமான காயத்ரி ரகுராம், இது ஒரு "என் மக்கள், என் மண்" யாத்திரை அல்ல. அது "என் நண்பர்கள் பணம், என் விளம்பரம்" பாவ யாத்ரா. அவரால் எதுவும் செய்ய முடியாது என்பது அப்பாவி மக்களுக்கு புரியவில்லை. புகார் அனைத்தும் மண்ணுக்கு மண் செல்கிறது. கடைசியில் திமுகவை இழிவுபடுத்துவதற்காக அண்ணாமலையும் அவரது போலி அணியும் அவரது புகார் பெட்டியில் ஒரு போலி புகாரை எழுதுவார்கள்’’ என்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் திடீர் நிறுத்தம்.. என்ன காரணம்?