Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை : கொலையாளி உருவம் கேமராவில் பதிவு

டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை : கொலையாளி உருவம் கேமராவில் பதிவு
, வியாழன், 5 மே 2016 (09:49 IST)
சென்னையில் டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளியின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை சவுகார்பேட்டை பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபுசிங் (50) என்பவர் சிவசக்தி டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம், ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் சேவையை வழங்கப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில், பாபுசிங் நேற்று முன் தினம் மாலை தனது டிராவல்ஸ் அலுவலகத்தில் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பாபுசிங்கின் தலையில் பின்பக்கம் பலத்த காயம் இருந்தது.
 
அங்கிருந்த் கண்காணிப்பு கேமராவில், பாபுசிங்கை மர்மநபர் துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகி உள்ளது. அதில், கொலையாளியின் உருவம் தெளிவாக பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொலையாளியை பிடிக்க காவல் துறையினர் தீவிர முயற்சு மேற்கொண்டுள்ளனர்.
 
சுமார் 7 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோ பதிவில், கொலையாளி பாபுசிங்கை சுட்டு விட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. அவன் நீலநிற ஜீன்ஸ் பேண்ட், கருப்பு நிற முழுக்கை சட்டை அணிந்துள்ளான்
 
கொலை நடப்பதற்கும் முன் அவன், பாலுசிங்கின் அலுவலகத்தில் சுமார் 7 நிமிடம் காரசாரமாக பேசிக் கொண்டிருக்கும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. கொடுங்கல் வாங்கல் பிரச்சனையில் பாபுசிங்கிடம் சண்டையிட்ட அவன், கோபம் தலைக்கேறியதில் அவரை சுட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. மேலும் கண்டிப்பாக அவன் பாபுசிங்கிற்கு நன்கு பழக்கப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
 
பாபுசிங்கின் 16 வயது மகனிடன் கொலையாளியின் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் படத்தில் இருப்பது யார் என்று தெரியவில்லை என்று கூறிவிட்டார். பாபுசிங்கின் அலுவலகம் அருகே கடை வைத்திருப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக தேர்தல் அறிக்கை : நாளை வெளியிடுகிறார் ஜெயலலிதா