போதிய பயணிகள் இல்லை: சென்னையில் இன்று 8 விமானங்கள் ரத்து!

Mahendran
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (10:19 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து கிளம்பும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் 8 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கனமழை காரணமாக விமானப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சென்னை விமான நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. 
 
இன்று கிளம்ப வேண்டிய எட்டு விமானங்களில் போதிய பயணிகள் இல்லாததால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் செல்லும் விமானங்களில் போதிய பயணிகள் இல்லாததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுடைய பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள சில விமான நிலையங்களில் போதிய பயணிகள் இல்லாததால் விமான நிலையங்களில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments