Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவுக்கு ஆப்பு வைத்த தமிழகம்

Advertiesment
கேரளாவுக்கு ஆப்பு வைத்த தமிழகம்
, வெள்ளி, 8 ஜூலை 2016 (11:20 IST)
முல்லை பெரியாறு அணை எந்த வெள்ளத்தையும் தாங்கும் என்று மூவர் குழுத் தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரியது. ஆனால் கேரள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணை பலவினமாக இருப்பதாகவும், அதனால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமானால் இடித்து கட்ட வேண்டும் என்று தெரிவித்தது.
 
இந்த பிரச்சனை 1978ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 134 அடியாக குறைத்து கொண்டது. தற்போது தமிழக பகுதியில் விவசாய நிலத்துக்கு வறட்சி நிலவி வருவதால் தமிழக அரசு சார்பில் மீண்டும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இதற்கு கேரள மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பேபி அணையை பலப்படுத்தி முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும்பொருட்டு தமிழக, கேரளப் பிரதி நிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. 
 
குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட தலைமை பொறியாளர் 3 மாதங்களுக்கு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக நியமிக்கப்பட்ட பி.ஆர்.க்க்.பிள்ளை தலைமையில் நேற்று சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக ஆய்வு நடைப்பெற்றது.
 
பின்னர் மாலை குமளியில் மூவர் குழுத் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழுத் தலைவர் கூறியதாவது:-
 
அணையின் 13 மதகுகளும் உறுதியாக உள்ளது. பெரியாறு அணை எந்த வெள்ளத்தையும் தாங்கும். அணை பலமாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பு அச்சத்தை போக்கவே இந்த ஆய்வுக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதிதான் ராம்குமாரை சென்னைக்கு அழைத்தார் : வழக்கறிஞர் ராமராஜ் (வீடியோ)