Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த இழி பிறவிகளோடு மிருகங்களை ஒப்பிடக்கூடாது!-எம்-எஸ்.பாஸ்கர்

J.Durai
திங்கள், 11 மார்ச் 2024 (09:13 IST)
கஞ்சா போதையால் மிருகமாகி சிறுமியை சீரழித்து கொன்று விட்டார்கள் என்ற கூற்றை நான் ஏற்க மாட்டேன்! எந்த மிருகமும் தன் வயதுக்கு ஏற்பில்லாத சிசுக்களை சீரழிப்பதில்லை! இந்த இழிபிறவிகளோடு மிருகங்களை ஒப்பிடக்கூடாது! அவை உயர்ந்தவை! 
 
பாண்டிச்சேரியில் அந்த குழந்தைக்கு நேர்ந்த பயங்கரத்தை ரணமான இதயத்தோடு உணர்வு பூர்வமாக கண்டிக்கிறேன்! குற்றம் நிரூபிக்கப்பட்டால் அறியாமல் செய்து விட்டார்கள் என்று இவர்களை ஐந்தாறு ஆண்டுகள் அடைத்து வைத்து பின் விடுவிப்பதில் அர்த்தமில்லை! இவர்கள் வாழத்தகுதி அற்றவர்கள்! மரணதண்டனைக்கு மேல் ஏதாவது தண்டனை இருந்தால் அதை கொடுத்து மற்றவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! குடும்பமும், உறவினர்களும், சமுதாயமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்! யாரும் இவர்களுக்கு ஒரு வாய் தண்ணீர் கூட தரக்கூடாது! 
 
வழக்கறிஞர் பெருமக்கள் யாரும் இவர்களுக்காக வாதாடக்கூடாது! 
நடக்குமா?

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments